Breaking News
தேசபந்து தென்னகோனுக்கு விசாரணை குழு முன்னிலையில் நிற்க அழைப்பாணை
தென்னகோன் மீதான மோசமான அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பாக அதன் கண்டுபிடிப்புகளை விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு' முன் நிற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் 2025 மே 19 ஆம் திகதி 'தென்னகோன் மீதான மோசமான அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பாக அதன் கண்டுபிடிப்புகளை விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு' முன் நிற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு இதுவரை பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற வளாகத்தில் கூடியுள்ளதுடன், அதன்படி, எதிர்கால விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆஜராகுமாறு குழுவால் முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





