ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 90 மில்லியன் டொலர்கள் கடனுதவி
இந்நிதி தேசிய ரீதியில் சுமார் 21 கிலோமீற்றர் நெடுஞ்சாலைகளின் புனரமைப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீற்றர் வீதிகளின் பராமரிப்பு என்பவற்றுக்கும் உதவும் என நிதியமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பின்தங்கிய சமூகங்களுக்கும் முக்கிய சமூக, பொருளாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 90 மில்லியன் டொலர்கள் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சு கைச்சாத்திட்டுள்ளது.
பின்தங்கிய பிரதேசங்களுக்கான சுமார் 500 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி, காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்றவாறானதும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு நேயமான வசதிகளை மேம்படுத்தல் என்பவற்றுக்கு இந்தக் கடன் நிதி பயன்படுத்தப்படும்.
அத்தோடு இந்நிதி தேசிய ரீதியில் சுமார் 21 கிலோமீற்றர் நெடுஞ்சாலைகளின் புனரமைப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீற்றர் வீதிகளின் பராமரிப்பு என்பவற்றுக்கும் உதவும் என நிதியமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்படி கடன் உதவிக்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கைகான அதன் பணிப்பாளர் டக்காஃபுமி கடானோவும் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.





