7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம்: அமைச்சர் ஆனந்த விஜேபால
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் வலையமைப்பை இல்லாதொழிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மத்திய கிழக்கில் தலைவறைவாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை பொலிஸ் அதிகாரிகளிடம் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
மத்திய கிழக்கில் தலைவறைவாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை பொலிஸ் அதிகாரிகளிடம் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் 09-11-2025 அன்று நடைபெற்ற முழு நாடும் ஒன்றாக செயற்திட்ட கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். சமூக கட்டமைப்பில் இருந்து போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் வலையமைப்பை இல்லாதொழிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மத்திய கிழக்கில் தலைவறைவாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை பொலிஸ் அதிகாரிகளிடம் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அரசியல் தரப்பினர் கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்கள் ஒன்றுக்கொண்டு தொடர்புப்பட்டுள்ளது. ஆகவே போதைப்பொருள் வர்த்தக வர்த்தக வலையமைப்பை இல்லாதொழித்தால் பாதாளக் குழுக்களை கட்டுப்படுத்தலாம்.
முழு நாடும் ஒன்றாக செயற்திட்டம் எதிர்கால இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டது. நாடளாவிய ரீதியில் சகல மாவட்டங்களிலும் இந்த செயற்திட்டம் அமல்படுத்தப்படும். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.





