Breaking News
ஆக்லாந்து டென்னிஸ்: ஸ்விடோலினா சாம்பியன்
முதல் செட்டை 6-3 என வென்ற ஸ்விடோலினா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என கைப்பற்றினார்.
ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் உக்ரைனில் ஸ்விடோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், பெண்களுக்கான ஏ.எஸ்.பி., கிளாசிக் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 31, சீனாவின் வாங் ஜின்யு 24, மோதினர். முதல் செட்டை 6-3 என வென்ற ஸ்விடோலினா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என கைப்பற்றினார்.
ஒரு மணி நேரம், 42 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்விடோலினா 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்விடோலினா, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் தனது 19வது பட்டத்தை தட்டிச் சென்றார்.





