மலையக மக்களுக்காக 13ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு என்பது பச்சை பொய் - மனோ கணேசன்
உண்மையில் மலையக மக்களுக்காக பதின்மூன்று ஆயிரம் ரூபா தொகை அறிவிக்கபட்டுள்ளது.
வரவு -செலவு திட்டத்தில் பதின்மூன்று ஆயிரம் ரூபா தொகை மலையக தமிழ் மக்களுக்காக ஒதுக்கீடு செய்ய பட்டுள்ளதாகவும், இது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மலையக மக்களுக்கு விசேடமாக அளித்த நன்கொடை என்பது போலவும், அர்த்தப்படும் தகவல்கள் அப்பட்டமான பொய்யாகும். அப்படி ஒரு தொகை மலையக மக்களுக்காக விசேடமாக ஒதுக்கபடவில்லை, என்பது உண்மையாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனேகணேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உண்மையில் மலையக மக்களுக்காக பதின்மூன்று ஆயிரம் ரூபா தொகை அறிவிக்கபட்டுள்ளது. ஆனால், தகவல் வெளியிடுபவர்கள் சொல்வது போன்று மலையக தமிழ் மக்களின் காணி, வீடு, கல்வி, வீதிகள், சுகாதாரம், மந்தபோஷனம், வேலை வாய்ப்பு, ஆகிய சமூக, பொருளாதார, கலாசார, தேவைகளை பெற்று தரும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யும், திட்டங்களுக்காக அல்ல.
தேயிலை, இறப்பர், தென்னை, பனை, ஆகிய இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழில் துறையை வளர்ச்சி அடைய செய்யவே இந்த தொகையின் மிக பெரும்பகுதி ஒதுக்க பட்டுள்ளது. அதையே மலையக தமிழ் மக்களுக்காக ஜனாதிபதி ஒதுக்கி விட்டார் என்று பிரசாரம் செய்யப்படுகிறது.
பனை செய்கையை வட-கிழக்கு, அம்பாந்தோட்டை, புத்தளம், மாவட்டங்களில் மேலும் விரிவு படுத்த 100 மில்லியன்; ரூபாவும், தென்னை புனர்வாழ்வு கருத்திட்டத்திற்கு 2,500 மில்லியன்; ரூபாவும், இறப்பர் மர ஆராய்ச்சிக்காக 500 மில்லியன்; ரூபாவும் தேயிலை கிராமங்கள் என்ற தேயிலை தொழில் பேட்டைகளை உருவாக்க 730 மில்லியன்; ரூபாவும் தேயிலை, இறப்பர், தென்னை, பனை, ஆகிய துறைகளில் பனி செய்யும் ஊழியர்களின் பிரஜா சக்தி அபிவிருத்திக்காக 3,000 மில்லியன்; ரூபாவும் தரிசு நிலங்களில் தேயிலை நடுவதற்கு சிறு தோட்ட முதலாளிகளுக்கு மானியமாக 820 மில்லியன்; ரூபாவும் தோட்ட முதலாளிகளுக்கு தேயிலை உர மானியம் 5,000 மில்லியன்; ரூபாவும், இறப்பர் தோட்ட முதலாளிகளுக்கு மீள் நடுகை மானியமாக 650 மில்லியன்; ரூபாவும் தோட்ட முதலாளிகளுக்கு இறப்பர் உர மானியம் 1,000 மில்லியன்; ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த வருடம் வழங்கபட்ட சம்பள உயர்வு மீண்டும் வழங்கபடுகிறது. இதை முறையாக வழங்காமல் கொண்டு வரும் தேயிலை கொளுந்து நிறையை கம்பனிகள் கூட்டி, சம்பள உயர்வை தர கெடுபிடி செய்கிறார்கள். அதனால், இம்முறை சம்பள உயர்வை வர்த்தமானி சட்டமாக வெளியிட சொன்னேன். அதையும் இந்த ஜனாதிபதி செய்யவில்லை.
இதுதான் உண்மை நிலைமையாகும். அநுரகுமார அரசாங்கம் பெருந்தோட்ட கைத்தொழில் துறையை வளர்ச்சி அடைய ஒதுக்கியுள்ள பதின்மூன்று ஆயிரம் மில்லியன் ரூபா தொகையை, மலையக தமிழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று பறையடித்து அறிவித்து, அப்பாவி மலையக மக்களை ஏமாற்றுவதும், அதற்கு துணை போவதும் கொடும்பாவ செயலாக நான் கருதுகிறேன்.
அதேவேளை உண்மையில், அரசாங்கம் இத்தகைய ஒரு தொகையை மலையக மக்களுக்காக ஒதுக்கி இருந்தால், வரவு,செலவுத்திட்ட நேரத்திலேயே எழுந்து, நின்று, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வாழ்த்தி, பாராட்டும், முதல் ஆளாக, கட்சி தலைவராக, எம்பியாக நான் இருந்து இருப்பேன் என்றுள்ளது.





