ரணிலின் பிரித்தானிய விஜயம் - மனைவி மைத்திரி, பிரத்தியேக செயலர் செண்ட்ரா தொடர்பாக விசாரிக்க சி.ஐ.டி.க்கு ஆலோசனை
ரணில் விக்கிரமசிங்கவுக்கு மன்றில் ஆஜராக வேறு தினம் வழ்னக்கப்பட்டுள்ளதால் அவர் ஆஜராகவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு முன்னெடுத்த விஜயமானது தனிப்பட்ட பயணமாக கருதப்படும் நிலையில், அவ்விஜயத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிகமாக தொடர்புபட்ட அவரது மனைவி கலாநிதி மைத்ரி விக்ரமசிங்க, பிரத்தியேக செயலாளர் சண்ட்ரா பெர்ணான்டோ ஆகியோரும் அரச நிதியை தவறாக பயன்படுத்தினரா என விசாரிக்குமாறு குற்றப் புலனயவுத் திணைக்கலத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு 11-02-2026 அன்று அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான 1.66 பில்லியன் ரூபாவுக்கு மேல் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், 2 ஆம் சந்தேக நபரான முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் விளக்கமரியல் காலம் குறித்து தீர்மானிக்க குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மேற்படி விடயத்தை அரிவித்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, சமன் ஏக்கநாயக்க சிறை அதிகாரிகள் ஊடாக மன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு மன்றில் ஆஜராக வேறு தினம் வழ்னக்கப்பட்டுள்ளதால் அவர் ஆஜராகவில்லை.
அதன்படி, வழக்கின் விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த மேலதிக சொலிச்ட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், சிறையில் இருந்தபோது இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து எடுக்கப்பட்ட வாக்குமூலத்தில், முதல் சந்தேக நபரான ரணில் விக்கிரமசிங்க ஒரு' ட்ரன்சிட்' ஆகமட்டுமே லண்டனுக்குச் சென்றார் என்றும், வூல்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றது அல்லது அவரது மனைவியின் பட்டமளிப்பு விழா குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
'கடந்த தவணை நீதிமன்ற உத்தரவு பிரகாரம் வூல்ஹம்டன் பல்கலைக் கழகத்துக்கு குறித்த பட்டமழிப்பு விழா அழைப்பிதல் உள்ளிட்ட தகவல்கலைக் கோரி கெஏள்விக் கொத்தொன்றை கடந்த பெபரவ்ரி 4 ஆம் திகதி அனுப்பினோம். இன்னும் அதற்குரிய பதில் கிடைக்கவில்லை.; என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் திலீப பபீரிஸ் கூறினார்.
அப்போது, விசாரணை தொடர்பான உத்தரவுகளை எதிர்பார்க்கிறீர்களா என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதிவான் கேட்டார். இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப , சர்ச்சைக்குரிய விஜயம் தொடர்பாக 2023/09/01 திகதியிடப்பட்ட கடிதத்தின் கையெழுத்துப் பரிசோதனைக்காக இரண்டாவது சந்தேக நபரை அரச இரசாயன பகுப்பாய்வாலர் முன் ஆஜர் செய்ய அனுமதி வேண்டும் என்று கூறினார். இதனை கருத்தில் கொண்ட நீதிவான் அதற்கு அனுமதி வழங்கினார்.





