கிளிநொச்சியில் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் கைது
2009 ஆம் ஆண்டு சந்தேகக் குற்றவாளியின் செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பு (வடக்கு) குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் பயணத் தடையைப் பெற்றிருந்தனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதான பிரித்தானிய குடியுரிமை கொண்டவர், 2009 இல் விதிக்கப்பட்ட பயணத் தடை காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
2009 ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்ற அந்த நபர், இங்கிலாந்தில் இருந்து ஒரு பயங்கரவாத குழுவிற்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் சிறிலங்காவுக்குத் திரும்பி கொழும்பு மற்றும் வன்னிப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு பணத்தை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு சந்தேகக் குற்றவாளியின் செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பு (வடக்கு) குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் பயணத் தடையைப் பெற்றிருந்தனர்.
சந்தேகக் குற்றவாளி சனிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
விமான நிலையக் காவல்துறையினர் மற்றும் கொழும்பு (வடக்கு) குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





