பிரிக்ஸ் அமைப்பில் சிறிலங்கா இணைய வேண்டும்: கம்மன்பில
கம்மன்பில ஜனாதிபதிக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் போக்குகள் வேகமாக மாறிவருவதாகவும், உலக வல்லரசு ஆசியாவை நோக்கி நகர்வதாகவும் கூறினார்.

பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் பெயரால் பெயரிடப்பட்டுள்ள பிரிக்ஸ் அமைப்பில் சிறிலங்கா உறுப்புரிமை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் எம்.பி உதய கம்மன்பில ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கம்மன்பில ஜனாதிபதிக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் போக்குகள் வேகமாக மாறிவருவதாகவும், உலக வல்லரசு ஆசியாவை நோக்கி நகர்வதாகவும் கூறினார்.
சிறிலங்கா தனது வெளியுறவுக் கொள்கையை சமீபத்திய சூழலில் மறுபரிசீலனை செய்து அதற்கேற்ப மறுசீரமைக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் சமீபத்திய உச்சிமாநாட்டில், சவுதி அரேபியா, ஈரான், எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய ஆறு நாடுகள் முழு அங்கத்துவத்தைப் பெற்றுள்ளன. இன்னும் பல நாடுகள் இதில் சேர முற்படுகின்றன.