உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியா மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்: வெள்ளை மாளிகை
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை இலக்கு வைத்து மாஸ்கோவை கசக்கிப் பிழியும் நிர்வாகத்தின் மூலோபாயத்தின் பாகமாக அவர் இந்த நடவடிக்கையை வடிவமைத்தார்.
உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருமாறு ரஷ்யாவுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது கடுமையான வரி விதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், இந்தியாவின் வரி விகிதத்தை டிரம்ப் இரட்டிப்பாக்கி, தற்போதுள்ள 25 சதவீதத்திற்கு மேல் 25 சதவீத வரியை சேர்த்துள்ளார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை இலக்கு வைத்து மாஸ்கோவை கசக்கிப் பிழியும் நிர்வாகத்தின் மூலோபாயத்தின் பாகமாக அவர் இந்த நடவடிக்கையை வடிவமைத்தார்.
"இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி பாரிய பகிரங்க அழுத்தத்தை கொடுத்துள்ளார். நீங்கள் பார்த்ததைப் போல, இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார்," என்று மேலும் மாஸ்கோ மீது "இரண்டாம் நிலை அழுத்தத்தை" பிரயோகிப்பதே நோக்கம் என்றும் கூறினார்.





