தமிழ், முஸ்லிம் கட்சியினர் அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்பு
ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் பணிப்பாளர் குழுமப் பிரதிநிதிகளுக்கும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 29-08-2025 அன்று நடைபெறவுள்ளது.
நாட்டுக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் பணிப்பாளர் குழுமப் பிரதிநிதிகளுக்கும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 29-08-2025 அன்று நடைபெறவுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் பணிப்பாளர் குழுமப் பிரதிநிதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளையும், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அதன் நீட்சியாக சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் முற்போக்குக்கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று (28) காலை 10.45 மணியளவில் கொழும்பிலுள்ள கோல்பேஸ் ஹோட்டலில் சந்திக்கவுள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள், நாட்டின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் நிலைவரம், மக்கள் முகங்கொடுத்துவரும் பொருளாதார நெருக்கடிகள், அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.
இச்சந்திப்பின்போது செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தை அப்பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டுவரவிருப்பதாகத் தெரிவித்த தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர்கள் முகங்கொடுத்துவரும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் எடுத்துரைக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.





