Breaking News
6 மாவட்டங்களில் வெப்பச்சுட்டின் அதிகரிக்கும் அபாயம்
போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். பகல் பொழுதில் நிழலான இடத்தில் ஓய்வாக இருத்தல் வேண்டும்.
நாட்டில் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு,அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஒருசில பிரதேசங்களில் இன்றைய தினம் பகல் பொழுதில் வெப்பச் சுட்டெண் அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வகையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். பகல் பொழுதில் நிழலான இடத்தில் ஓய்வாக இருத்தல் வேண்டும்.
வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் குறித்து விசேட கவனம் செலுத்தல் வேண்டும்.சிறுவர்களை வாகனங்களில் தனித்து விட வேண்டாம்.உடலில் இருந்து வியர்வை அதிகளவில் வெளியேறும் வகையிலான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்வது அவசியமானது என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதl





