Breaking News
கெஹெலிய வீட்டின் முன்னாள் பணிப்பெண் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது ஆணைக்குழுவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் வேலை செய்த முன்னாள் வீட்டுப் பணிப்பெண் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கைது செய்துள்ளது.
சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களை வழங்குவதன் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது ஆணைக்குழுவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேகக் குற்றவாளியை எதிர்வரும் 11 ஆம் திகதி அளுத்கடே நீதவான் நீதிமன்றில் முன் நிறுத்திய பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.





