விவசாயிகளின் விடயத்தில் அரசாங்கம் அசமந்தம் - சிறீநாத் எம்.பி.
மக்கள் தமது உரிமைகளுக்காகவும், தமது உற்பத்திக்காகவும் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்கள் தமது உரிமைகளுக்காகவும், தமது உற்பத்திக்காகவும் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கருத்திற்கொண்டு விவசாய அமைச்சும் ஜனாதிபதியும் தலையிட்டு வழங்க வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கம் அசமந்தப் போக்கில் செயற்பட்டால் விவசாயிகள் நாடு முழுவதும் போராடும் நிலைமை ஏற்படலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறீநாத் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் 23-06-2026 அன்று நடைபெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு,சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள்,இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான விதிமுறைகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: வற் வரி விதிப்புகள் மூலம் நாட்டில் வருமானத்தை அதிகரித்து நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும், பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிக்கப்படாத வகையில் சுயாதீன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
வெற்வரியை அடிப்படையாக உணவுப் பொருட்கள்,வாழ்வாதாரம், கல்வி ஆகிய விடயங்களில் சீராக மேற்கொள்வதன் மூலம் நாட்டில் கஸ்டப்படும் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு உள்ளது.
உழைக்கின்ற வர்க்கம் நாட்டில் பொருளாதாரத்தின் முக்கிய பொருளாதார முதுகெலும்பாக இருக்கின்றனர். இதுபோன்ற வரித்தீர்மானங்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் மக்களை பாதுகாத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இப்போது மருந்துப்பொருட்கள் விலைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வரியால் நோயாளர்கள் நெருக்கடிக்குள் தள்ளப்படக்கூடாது. அடிப்படையான அடித்தட்டு மக்களை பாதுகாக்க வேண்டும்.
அத்துடன் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்காத வகையில் வரி அறவீட்டை மேற்கொள்ள வேண்டும்.
எமது மாவட்டத்தில் மக்கள் பெரிய ஆர்ப்பாட்டத்தை செய்துள்ளனர். நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்காத காரணத்தினாலேயேயே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உற்பத்தி செலவு பாரியளவில் அதிகரிக்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் இவ்வாறு போராட்டங்களை நடத்துகின்றனர்.
மக்கள் தமது உரிமைகளுக்காகவும், தமது உற்பத்திக்காகவும் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கருத்திற்கொண்டு விவசாய அமைச்சும் ஜனாதிபதியும் தலையிட்டு வழங்க வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கம் அசமந்தப் போக்கில் இருந்தால் விவசாயிகள் நாடுமுழுவதும் போராடும் நிலைமை ஏற்படலாம்.





