இலங்கையிலிருந்து இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவுக்கு விஜயம்
14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்களைக் கொண்ட 24 பேர் கொண்ட குழு ஜூலை 14-25 வரை இந்தியாவுக்கு விஜயம் செய்தது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் பல்வேறு நிலைகளில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முதல் வகையான திட்டமாக இளம் அரசியல் தலைவர்களைக் கொண்ட குழுவொன்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளது.
14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்களைக் கொண்ட 24 பேர் கொண்ட குழு ஜூலை 14-25 வரை இந்தியாவுக்கு விஜயம் செய்தது. இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிலைகளில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முதல் வகையான திட்டம் இதுவாகும். டெல்லி, பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கான இந்த விஜயம் , இந்தியாவின் வளர்ச்சி முயற்சிகள் , பொருளாதார நவீனமயமாக்கல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ஜனநாயக மரபுகள் மற்றும் அதன் வளமான கலாச்சார பாரம்பரியம் பற்றிய சுருக்கமான கண்ணோட்டத்தை பிரதிநிதிகளுக்கு வழங்கியது.
டெல்லியில் இக்குழு வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்தது. தொழில்நுட்பம், முதலீடு மற்றும் இணைப்பு ஆகியவற்றில் ஆழமான தொடர்புகளால் இந்தியா-இலங்கை கூட்டாண்மைக்கான எதிர்காலத் திட்டம் பலப்படுத்தப்படும் என்று வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்தினார்.
சட்டமன்றத்துக்கு விஜயம் செய்திருந்த இக்குழு சட்டமன்ற செயல்முறைகள், பாராளுமன்றக் குழுக்களின் அமைப்பு மற்றும் பிற தொடர்புடைய விடயங்கள் குறித்த அமர்வுகளும் இதன் போது இடம்பெற்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) மற்றும் இளைஞர் தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. இந்தப் பயணத்தின் போது, பீகார் மற்றும் கர்நாடகாவின் ஆளுநர்களையும் அவர்கள் சந்தித்தனர்.
இந்த அரசியல் பரிமாற்றங்களைத் தவிர ஏனைய பல நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பில் இந்தியாவின் வெற்றி இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் உள்ள பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடனான தொடர்புகள் இந்திய பொருளாதாரம் மற்றும் வளர்ந்து வரும் வெளியுறவுக் கொள்கை, புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு உள்ளட்டவை தொடர்பான அமர்வுகளும் இடம்பெற்றுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த இளம் தலைவர்களுக்கான இந்தப் பல்துறைத் திட்டத்தை இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் மற்றும் டில்வி வெளியுறவு அமைச்சகம் தொகுத்து வழங்கின. இந்தியா - இலங்கை கூட்டாண்மையின் வரம்பற்ற திறனை உணர்ந்து கொள்வதில் முக்கிய பங்குதாரர்களாக இளம் அரசியல் தலைவர்களின் பங்கை இந்த திட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.