எதிர்க்கட்சி தலைவர் ஷஷி தரூருடன் சந்திப்பு
இரு தரப்பினருக்குமிடையில் அபிவிருத்தி சார் பல விடயங்கள் தொடர்பான கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், காங்ரஸ் கட்சியின் சிரேஷ;ட தலைவருமான கலாநிதி ஷஷி தரூரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல், இரு நாட்டு மக்களிடையே உறவுகளை மேம்படுத்தல் மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பினரும் அவதானம் செலுத்தியுள்ளனர்.
மேலும் இரு தரப்பினருக்குமிடையில் அபிவிருத்தி சார் பல விடயங்கள் தொடர்பான கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள கலாநிதி ஷஷி தரூர், இலங்கை - இந்தியாவுக்கிடையிலான அபிவிருத்தி மற்றும் கூட்டு முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
'இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களுக்காக வரவேற்றதில் மகிழ்ச்சி. எமது இரு நாடுகளின் தேசிய வளர்ச்சி மற்றும் கூட்டு முன்னேற்றம் அத்துடன் ஜனநாயகத்தின் நிலை ஆகிய முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த முக்கியமான உரையாடலைத் தொடர நாங்கள் இருவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்' என கலாநிதி ஷஷி தரூர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





