பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் 26 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன
2025.01.01 ஆம் திகதி முதல் 2025.12.31 ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பல சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 26 சட்டமூலங்களே சட்டமாக்கப்பட்டுள்ளன.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 26 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளன.
2025.01.01 ஆம் திகதி முதல் 2025.12.31 ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பல சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 26 சட்டமூலங்களே சட்டமாக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் ( விசேட ஏற்பாடுகள்)சட்டம், உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம், ஒதுக்கீட்டுச் சட்டம், சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டம், குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம்,வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்)சட்டம்,
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டம்,வேலையாட்களின் வரவு செலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தச்)சட்டம்,வேலையாட்களின் வரவு செலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம்,வேலையாட்களர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம், கம்பெனிகள் (திருத்தச்) சட்டம்,
மற்றும் நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டம், இலங்கை மின்சார (திருத்தச்) சட்டம், சமுர்த்தி (திருத்தச்) சட்டம், இறப்பர் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டம், பணசூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபைச் சட்டம், ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை (நீக்குதல்) சட்டம்,தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகச் சட்டம்,
விளையாட்டு ஊக்குப்பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயம் (திருத்தச்) சட்டம், தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், ஒதுக்கீட்டுச் சட்டம், சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை அறவீடு (திருத்தச்) சட்டம்,பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டம், செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டம் ஆகியன இந்த ஒருவருட காலப்பகுதியில் இயற்றப்பட்டுள்ளன.





