மல்வானை வீட்டை உயர்கல்விக்கு பயன்படுத்துமாறு அணைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டம்
கடந்த காலங்களில் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரால் தமக்கு சொந்தமானதல்ல என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டதையடுத்து, இச்சொத்து அரசுடமையாக்கப்பட்டது.
பல்கலைகழக கட்டமைப்பினுள் நிலவும், இடப்பற்றாக்குறைக்கு தீர்வாக மல்வானையில் அமைந்துள்ள பசில் ராஜபக்ஷவுக்கு உள்ளிட்ட தரப்பினருக்கு சொந்தமானதல்ல என உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட, 16 ஏக்கர் காணியுடனான வீட்டை உடனடியாக உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக பொறுப்பேற்குமாறு வலியுறுத்தி 14-05-2026அன்று பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அணைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேற்படி ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் கடுமையான இடப்பற்றாக்குறைக்குத் தீர்வாக, மல்வானையில் அமைந்துள்ள 16 ஏக்கர் காணியையும் வீட்டையும் பயன்படுத்த வேண்டும் என்பதே மாணவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. கடந்த காலங்களில் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரால் தமக்கு சொந்தமானதல்ல என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டதையடுத்து, இச்சொத்து அரசுடமையாக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது வழங்கிய வாக்குறுதிக்கமைய, மக்களிடமிருந்து திருடப்பட்ட இவ்வாறான சொத்துக்களை உடனடியாகத் தேசியமயமாக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். கடந்த சில வாரங்களாக இது குறித்து அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியும் சாதகமான பதில் கிடைக்காமையால், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். 2022 ஆம் ஆண்டு மே 9 வன்முறையின் போது சேதமடைந்த இந்த வீடு நீண்டகாலமாக பராமரிப்பின்றி உள்ளது.





