Breaking News
தொழிற்சங்கவாதி ரவிகுமுதேஷ் பணி இடைநீக்கம்
இடைநீக்க காலத்தில் அவருக்கு சம்பளம் அல்லது வேறு எந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ்2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி இடைநீக்க காலத்தில் அவருக்கு சம்பளம் அல்லது வேறு எந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஒழுங்கு நடவடிக்கைகள் முடியும் வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரவி குமுதேஷ் நிறுவன விதிகளை மீறி 2024 பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதால் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.





