பெப்.11 இல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை
நிரூபிப்பதற்காக 32 சாட்சிகள், 13 ஆவணங்கள் மற்றும் 40 தடயப் பொருட்களின் பட்டியலையும் ஆணைக் குழு நீதிமன்றில் நீதிமன்றில் சமர்பித்துள்ளது.
சட்டத்துக்கு புறம்பான வழிகளில் சொத்து சேர்த்தமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தர்வை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் மிஹால் பிறப்பித்தார்.
விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலப்பகுதியில், அதாவது 2009 ஜனவரி முதலாம் திகதிக்கும் 2014 டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சம்பாதிக்கப்பட்ட வழி முறையை வெளிப்படுத்த முடியாத வகையில் சேர்க்கப்பட்ட 75 மில்லயன் ரூபா பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலேயே இந்த சொத்துக் குவிப்பு வழக்கு தாக்கல்ச் செய்யப்ப்ட்டுள்ளது.
இது தொடர்பில் 26 குற்றச்சாட்டுக்களை விமல் மீது சுமத்தியுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக் குழு, அவற்றை நிரூபிப்பதற்காக 32 சாட்சிகள், 13 ஆவணங்கள் மற்றும் 40 தடயப் பொருட்களின் பட்டியலையும் ஆணைக் குழு நீதிமன்றில் நீதிமன்றில் சமர்பித்துள்ளது.
விமலால் சட்டத்துக்கு புறம்பாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மேற்படி சொத்துக்களில் வீடு, வாகங்கள் மற்றும் பணம் ஆகியன உள்ளடங்குகின்றது.





