Breaking News
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23-09-2025 ஆம் திகதி லொட்டி நியூயோர்க் பலஸ் ஹோட்டலில் வழங்கிய சிறப்பு இரவு விருந்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொது சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23-09-2025 ஆம் திகதி லொட்டி நியூயோர்க் பலஸ் ஹோட்டலில் வழங்கிய சிறப்பு இரவு விருந்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமோகமாக வரவேற்றதுடன், சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இரு அரச தலைவர்களும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





