கைப்பேசி இன்றி இரண்டாவது கல்வியாண்டைத் தொடங்கும் கியூபெக் மாணவர்கள்
கைப்பேசி தடைக்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவதையும், ஒருவரோடு ஒருவர் அதிகமாகப் பழகுவதையும் ஆசிரியர்கள் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளில் கைப்பேசிப் பயன்பாட்டுக்கு கியூபெக் அரசு 2025ஆம் ஆண்டு விதித்த தடை, தற்போது இரண்டாவது கல்வியாண்டிலும் தொடர்கிறது.
இந்த முயற்சியின் முதல் ஆண்டு “மிகவும் சிறப்பாக” அமைந்ததாக, ஆசிரியர் கல்விச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெடராசியோன் தே சிண்டிகா தே லாங்செய்ன்மான் அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் பெர்ஜ்வான் தெரிவித்துள்ளார்.
கைப்பேசி தடைக்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவதையும், ஒருவரோடு ஒருவர் அதிகமாகப் பழகுவதையும் ஆசிரியர்கள் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கைப்பேசித் திரைகளில் தஞ்சம் புகுந்து தங்கள் பதற்றத்தைத் தணித்துக்கொள்ளப் பழகியிருந்த சில மாணவர்களுக்கு, இந்த மாற்றம் தங்களது பதற்றத்தை சமாளிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஓகா அறிக்கையின்படி, கைப்பேசித் தடையின் எதிர்மறையான விளைவுகளில் ஒன்றாகப் பதற்றத்தை சமாளிப்பதில் ஏற்பட்ட சிரமத்தைக் குறிப்பிட்ட மாணவிகளின் விகிதம் கிட்டத்தட்ட 40 சதவீதமாக இருந்தது. மாணவர்களில் இந்த விகிதம் சுமார் 20 சதவீதமாக இருந்தது,





