பொருளாதார மீட்சியானது மக்களுக்கு உண்மையான பலன்களை வழங்க வேண்டும் -ஜனாதிபதி
நிலையான நீண்ட கால பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு நாணய நிதியத்தின் அளவுகோள் கொள்கைகளை கடைப்பிடிப்பது அவசியம்.
சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டங்களை செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டது. தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் மேக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணி வருவதற்கும், அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் உறுதியாக இருப்பதற்கும் தூதுக்குழு அரசாங்கத்தைப் பாராட்டியது.பல சவால்களுக்கு மத்தியிலும்இ இலங்கை உறுதியுடன் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதை ஏற்றுக்கொண்ட நிதியம், நாடு தனது பொருளாதார மீட்சியை நோக்கி நகரும் போது அரசாங்கத்திற்கு தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தது.
வெளிப்புற அழுத்தங்கள் காரணமாக அல்லாமல், பொருளாதாரக் நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து, மிகவும் வலுவான மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் அவசியம் என்று அரசாங்கம் உறுதியாக நம்புவதாலேயே சர்வதேச நாணய நிதிய திட்டத்தைச் செயல்படுத்துவதில் முழு அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சோனாலி ஜெயின் சென்ட்ரா தலைமையிலான நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் நேற்று (30) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து, இலங்கையின் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் அதன் பொருளாதார மீட்சித் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டினர்.
ஜூன் 24 முதல் 30 வரை கொழும்புக்கு வருகை தந்திருந்த சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் விஜயத்தின் நிறைவைக் குறித்தது. இந்த விஜயத்தின் போது, சமீபத்திய நுண்-பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் சீர்திருத்தங்களை செயல்படுத்துவது குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
பொருளாதாரத்தை அரசாங்கம் கையாண்ட விதத்தை சர்வதேச நாணய நிதியம் பெரிதும் பாராட்டியதுடன், தமது ஆதரவு திட்டங்களை செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டது. தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் நுண்-பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணி வருவதற்கும், அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் உறுதியாக இருப்பதற்கும் தூதுக்குழு அரசாங்கத்தைப் பாராட்டியது.
பல சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை உறுதியுடன் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதை ஏற்றுக்கொண்ட நிதியம், நாடு தனது பொருளாதார மீட்சியை நோக்கி நகரும் போது அரசாங்கத்திற்கு தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இடம்பெறவிருக்கும் விரிவாக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்ட ஏற்பாட்டின் ஏழாவது மதிப்பாய்வின் போது, இலங்கையின் திட்ட செயல்பாடு முறைப்படி மதிப்பிடப்படும் என்று தூதுக்குழு ஜனாதிபதி திஸாநாயக்கவிடம் தெரிவித்தது. இத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய ஏனைய கடப்பாடுகள் மதிப்பாய்வுக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போதைய வெளிப்புற சவால்களை எதிர்கொள்வதற்கும்,நிதி மற்றும் வெளிப்புற ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், நெகிழ்ச்சித்தன்மையை வலுப்படுத்துவதற்கும்,வலுவான, நீடித்த மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கும் சீர்திருத்தங்களின் வேகத்தைத் தக்கவைப்பது முக்கியம் என்று நாணய நிதியம் வலியுறுத்தியது.
வெளிப்புற அழுத்தங்கள் காரணமாக அல்லாமல், பொருளாதாரக் கஷ்டங்களிலிருந்து இலங்கையை மீட்டெடுத்து, மிகவும் வலுவான மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் அவசியம் என்று தனது அரசாங்கம் உறுதியாக நம்புவதாலேயே சர்வதேச நாணய நிதியச் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முழு அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி திஸாநாயக்க மீண்டும் வலியுறுத்தினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கிய முன்னுரிமை அளிக்கப்படும் அதேவேளையில், பொருளாதார மீட்சியின் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் இறுதி நோக்கம். பொருளாதார வளர்ச்சி வாழ்வாதாரங்களிலும் வாழ்க்கைத்தரத்திலும் உறுதியான முன்னேற்றங்களாக மாறுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
திட்டத்தைச் செயல்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்துக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அமெரிக்க வரிகள் , 'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் உள்ளிட்ட வெளிப்புற அதிர்ச்சிகளின் மோசமான தாக்கங்கள் இடையூறுகளையும் தாமதங்களையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், நுண்-பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் விரைவாகச் செயற்பட்டதுடன், நாட்டை மீட்சிப் பாதையில் உறுதியாக வைத்திருப்பதற்கு சாத்தியமான அனைத்தையும் தொடர்ந்து செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி செயற்திட்ட ஏற்பாட்டின் கீழ் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் பலன்கள் அனைத்து குடிமக்களையும் சென்றடைவதை உறுதி செய்யும் அதேவேளையில், திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
நிலையான நீண்ட கால பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு நாணய நிதியத்தின் அளவுகோள் கொள்கைகளை கடைப்பிடிப்பது அவசியம். மக்களுக்கு தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தாமல் பொதுமக்களுக்கு அதிகபட்ச பலனை அளிக்கும் வகையில் அரசாங்கம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. திட்டத்தை செயல்படுத்துவதில் இரு தரப்பினரும் கணிசமான நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளனர்.இந்த பரஸ்பர புரிதலும் ஒத்துழைப்பும் சீர்திருத்த திட்டத்தை பெரிய தடைகள் ஏதுமின்றி சீராக முன்னோக்கி கொண்டு செல்ல உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதையும்,நாட்டிற்கு நீடித்த பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கை அரசாங்கமும் ஐஎம்எஃப் உம் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன் கலந்துரையாடல்கள் நிறைவடைந்தன.





