எலான் மஸ்க்குடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
உலகளாவிய
இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் உலக நீர் மாநாட்டின் 10 ஆவது உயர்மட்டக் கூட்டத்தின் இடையே, கோடீஸ்வரரும் முதலீட்டாளருமான எலோன் மஸ்க்கை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஸ்க் ஆகியோர் சிறிலங்காவில் 'ஸ்டார்லிங்க்' திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
உலகளாவிய "ஸ்டார்லிங்க்" வலையமைப்புடன் நாட்டை இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு சிறிலங்கா அர்ப்பணிப்புடன் உள்ளது என்று வலியுறுத்தப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜனாதிபதியுடன் இந்தோனேசியாவுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், "சிறிலங்காவின் மீட்சி, பொருளாதார திறன் மற்றும் முதலீட்டுக்கான புதிய வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதியும் எலோனும் கலந்துரையாடினர்" என்று ட்வீட் செய்துள்ளார்.
"சிறிலங்காவுக்காக இரண்டு தொலைநோக்கு தலைவர்கள் ஒன்றிணைந்திருப்பது மிகவும் நல்லது."





