இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு அடுத்த வாரம் சிறிலங்கா வரவுள்ளது
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்து வரும் பதட்டங்களும் உப்பு இறக்குமதி தாமதத்திற்குப் பங்களித்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு கப்பல் அடுத்த புதன்கிழமை (மே 28) சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்து வரும் பதட்டங்களும் உப்பு இறக்குமதி தாமதத்திற்குப் பங்களித்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
நேற்று (19) காலை புத்தளம் உப்புத் தொழிற்சாலைக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சில குழுக்கள் அதிக அளவில் உப்பை வாங்குவதால், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் உப்பைச் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.





