ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி
இந்த வழக்கு 26-06-2026 அன்று விசாரணைனக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் தலைமை நீதிபதியான கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல நேற்றையதினம் உத்தியோகபூர்வ விடுமுறையில் இருந்தமையினால், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்வைக்கப்பட்ட சான்றுகளை ஆராய்ந்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு முன்னரான மாநாட்டிற்காக இந்த வழக்கினை ஜூலை 31ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு 26-06-2026 அன்று விசாரணைனக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
இஸ்லாமிய மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமை மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





