கிரேக்க பிணைமுறி விவகாரம்: அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 5 பேர் விடுதலை
குற்றப்பத்திரிக்கையில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்ட முன்னாள் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 5 பேரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிரேக்க பிணைமுறி மோசடித் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் 11-12-2025 அன்று மீளப்பெறப்பட்டது.
அதற்கமைய குற்றப்பத்திரிக்கையில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்ட முன்னாள் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 5 பேரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு கிரேக்கத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை அரச நிதியை கிரேக்க பிணைமுறிகளில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவர் எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.





