மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளர்கள் அசௌகரியம்
நாட்டிலுள்ள பல பிரதான வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அவசர மருத்துவ சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன.
கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
நாட்டிலுள்ள பல பிரதான வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அவசர மருத்துவ சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன. வெளி நோயாளர் பிரிவு உள்ளிட்ட எந்த சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் பெருமளவான மக்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
எவ்வாறிருப்பினும் சிறுவர் வைத்தியசாலைகள், மகப்பேற்று வைத்தியசாலைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் அங்கொட தேசிய மனநல வைத்தியசாலை என்பவற்றில் வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் தமக்கு ஸ்திரமான பதில் வழங்கப்படாவிட்டால் திட்டமிட்ட படி வேலை நிறுத்தத்தை தொடர்வோம் என்றும், இதனால் பொது மக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களுக்கு அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





