பல பகுதிகளில் மீண்டும் மழை - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்தது
நாடளாவிய ரீதியில் 04-12-2025 அன்று வரையிலான தரவுகளின் பிரகாரம் 5,09, 680 குடும்பங்களைச் சேர்ந்த 1 ,814, 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தித்வா புயலால் நாடளாவிய ரீதியில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு இன்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துள்ளது. கடந்த ஒருவாரமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், காணாமல்போனோரை தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 04-12-2025 அன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 04-12-2025 அன்று வரையிலான தரவுகளின் பிரகாரம் 5,09, 680 குடும்பங்களைச் சேர்ந்த 1 ,814, 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 481 பேர் உயிரிழந்துள்ளதோடு, காணாமல் போயுள்ள 345 பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அது மாத்திரமின்றி 1,967 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 50 173 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அனர்த்த நிலைமை காரணமாக 48 ,559 குடும்பங்களைச் சேர்ந்த 1,71, 492 பேர் 1,236 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.





