சேதமடைந்த சகல லயன் வீடுகளையும் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை
நடைபெற்ற வரலாற்று மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்டு ஹட்டன் பிரகடனத்தில் “ தோட்ட மக்களின் உரிமை பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் “ என இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மலையக சமூகத்தின் சேதமடைந்த லயன் வீடுகளை புதுப்பிப்பதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் எண்ணூற்று இருபத்தி ஐந்து இலட்சத்து அறுபத்தாராயிரத்து இருபது ரூபா பெறுமதியான (825, 66, 020.00) கூரைத்தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் தலைமையில் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடு மலையக மக்களின் புதுப்பிக்கப்பட வேண்டிய சகல வீடுகளையும் புதுப்பிப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கையாக அமையவிருக்கின்றது.
அதன்படி பெருந்தோட்ட அமைச்சினால் 825 இலட்சம் ரூபாய் அளவிலான நிதி செலவிடப்பட்டு, சேதம், சேதமடைந்த லயன் வீடுகளை புதுப்பிப்பதற்கு அவசியமான கூரைத் தகடுகளை சம்பந்தப்பட்ட தோட்டங்களுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த லயன் வீடுகளில் உள்ள தோட்ட கம்பனிகளின் ஊடாக அவசியமான ஏனைய உபகரணங்களையும் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பழுதடைந்த வரிசை வீடுகளை புதுப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
காலி, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் பல வருடங்களாக புதுப்பிக்கப்படாத சேதமடைந்த லயன் வீடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மலையக மக்களை குடியமர்த்துவதற்காக 1880 ஆம் ஆண்டளவில் ஆரம்பத்தில் லயன் அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், மிகவும் குறைந்த வசதிகளுடன் அதிகமான மக்கள் இன்றும் அந்த லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
2023 செப்டம்பர் 23 ஆம் திகதி ஹட்டன் நகரில் தோட்ட மக்கள் இந்த நாட்டிற்கு வருகை தந்து இருநூறு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெற்ற வரலாற்று மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்டு ஹட்டன் பிரகடனத்தில் “ தோட்ட மக்களின் உரிமை பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் “ என இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மொத்த சனத் தொகையில் 4.1% இல் உள்ள மலையக மக்கள் அன்றும் இன்றும் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு ஆற்றிய பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. கடந்த 2025 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதினால் 1.5 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றதுடன் கடந்த ஒவ்வொரு வருடத்திலும் மலையக மக்கள் நாட்டிற்கு மில்லியன் கணக்கான டொலர்களை வழங்குவதற்கு அர்ப்பணித்துள்ளார்கள்.
இம் மக்களின் வாழ்க்கை தரத்தை அதிகரிப்பதற்கான நோக்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 1,350 ரூபாயாக காணப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





