வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தீவீரமடையும்
இலங்கைக்கு தெற்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக வலுவிழந்து வருகின்ற போதிலும், அதன் நகர்வால் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு தெற்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து நகரக் கூடும் என்பதால் எதிர்வரும் தினங்களிலும் மழையுடனான சீரற்ற காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தெற்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக வலுவிழந்து வருகின்ற போதிலும், அதன் நகர்வால் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்களில் பொதுவாக 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும். ஏனைய பகுதிகளில் பொதுவாக 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.





