சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு: கண்ணிவெடி அகழ்வு நிறுத்தம்
20-07-2025 அன்று குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்டளையை பெறுவதற்காக குறித்த பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித எச்சங்கள் வெளிவந்ததை அடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மூதூர் - சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டிருந்ததோடு கண்ணிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையிலேயே 20-07-2025 அன்று குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்டளையை பெறுவதற்காக குறித்த பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித எமனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.