பொருளாதாரம் ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது: அமைச்சர் நளிந்த
அரச ஊழியர்களுக்கு உணரக்கூடிய வகையில் அடிப்படைச்சம்பளத்தை அதிகரித்திருக்கிறோம். ஜனவரியில் மேலும் அதிகரிக்கப்படும்.
அரச நிதி ஒழுங்கு மற்றும் அரச நிதி முகாமைத்துவம் ஆகிய இரண்டு விடயங்களுமே நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு காரணமாகும். இந்த இரண்டு விடயங்களையும் அரசாங்கம் முறையாக பேணி வந்தமையாலே ஒருவருடத்துக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைமைக்கு கொண்டுவர முடியுமாகி இருந்ததென அமைச்சர் நனிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-11-2025அன்றுஇடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வங்குரோத்து அடைந்த நாட்டையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொறுப்பேற்றார். கடன் செலுத்த முடியாமல் அனைத்து கடன் தரப்படுத்தும் நிறுவனங்களும் எம்மை கீழே இறக்கி இருந்தன.உலக நாடுகள் எமக்கு விசா வழங்கவில்லை.
இலங்கையர்கள் அந்த நாடுகளுக்கு வந்தால், மீ்ண்டும் திரும்பி செல்லமாட்டார்கள் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது.எமது கடவுச்சீட்டுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை. அப்படியான நாட்டை ஜனாதிபதி பொறுப்பெடுத்து இன்று ஸ்திர நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது.
ஆனால் நாடு இன்று ஸ்திர நிலைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் முழு பாராட்டையும் எமக்கு வழங்க முடியாது, பொருளாதரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கை இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டடிருந்ததாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அப்படியானால், 2022 மார்ச் மாதத்தில் நடத்தவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தியிருக்கலாமே? தேர்தலை நடத்த பணம் இல்லை என்றே அன்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். 2022இல் நடத்த இருந்த தேர்தலை நாங்கள் அதிகாரத்துக்கு வந்து, தேர்தலை நடத்தும்வரை உள்ளூராட்சி மன்ற தேர்தலை இவர்களுக்கு நடத்த முடியாமல் போனது.
அதேபோன்று 2019 பொருளாதார நிலைக்கு நாட்டை கொண்டுவர குறைந்தபட்சம் 10 வருடங்களாவது செல்லும் என்றே அவர்கள் தெரிவித்தனர்.அவ்வாறு இருந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் எமக்கு வாக்களிக்கும்போது, நாங்கள் பொருளாதாரத்தை நூறுவீதம் கட்டியெழுப்பும் என்ற நம்படிக்கையில் வாக்களித்திருக்க மாட்டார்கள்.
எமக்கு வாக்களித்து பார்ப்போம் என்று எண்ணியே வாக்களித்திருப்பார்கள். ஆனால் நாங்கள் ஒரு வருடத்துக்குள் நாட்டின் பொருளாதாரத்தை இஸ்திர நிலைக்கு கொண்டுவந்திருக்கிறோம். நாங்கள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி இருப்பதை சர்வதேச நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.
ஒரு வருடகாலத்தில் நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்கு ஸ்திரமடையும் என பல சர்வதேச நிதி நிறுவனங்கள் நம்பவில்லை. அவர்கள் குறைந்தளவு அபிவிருத்தி வேகத்தையே எதிர்வு கூறியிருந்தன. அது சாதாரண விடயமாகும். கடந்தகால ஆட்சியாளர்களின் வேலைத்திட்டங்களை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் அவ்வாறு தெரிவித்திருப்பார்கள்.
ஆனால் எமது ஆட்சியில் ஒரு வருடத்துக்குள் பொருளாதாரம் ஸ்திரமடைய பிரதான இரண்டு விடயங்கள் இருந்தன. அதாவது, அரச நிதி ஒழுங்கு மற்றும் அரச நிதி முகாமைத்துவம். இந்த இரண்டு விடயங்களுமே நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு காரணமாகும். இந்த இரண்டு விடயங்களையும் அரசாங்கம் முறையாக பேணி வந்தமையாலே ஒருவருடத்துக்குள் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்த முடியுமான பெறுபேறு கிடைத்திருக்கிறது. அவ்வாறு இல்லாமல் வேறு எந்த நடவடிக்கையும் அல்ல.
அத்துடன் அரசாங்கத்தின் பாரிய அர்ப்பணிப்பு, இலக்கை நோக்கி பயணிக்கும் எமது வேலைத்திட்டத்தை முறையாக மேற்கொண்டதன் மூலம் நாடடுக்கு வருமானத்தை தரும் நிறுவனங்களின் இலக்கு, எதிர்வுகூறிய இலக்கை தாண்டிசெல்ல முடியுமாகவிருந்தது. அதன் பெறுபேராகவே எம்மால் பொருளாதாரததை ஸ்திரதன்மைக்கு கொண்டுவர முடியுமாகி இருக்கிறது. இதன்காரணமாக மொத்த தேசிய உற்பத்தியில் அரச வருமானத்தை 15.3 வீதத்தை தாண்டிச் செல்ல முடியுமாகி இருக்கிறது.அரச செலவுகளை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியுமாகி இருக்கிறது. நாங்கள் அரச செலவு இலக்கை முகாமைத்துவம் செய்துகொண்டிருக்கிறோம்.
அதேபோன்று எமது கையிறுப்பு 6பில்லியன் டொலர்வரை நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறோம். அதனை 7பில்லியன் வரை அபிவிருத்தி செய்வதே எமது இலக்காகும். வங்குரோத்து காலப்பகுதியில் எமது கடன் அளவு மொத்த உ்ற்பத்தியில் நூற்றுக்கு 114சதவீதமாக இருந்தது. அதனை தற்போது நூற்றுக்கு 96 வீதமாக குறைத்துக்கொள்ள முடியுமாகி இருக்கிறது. இவ்வாறுதான் நாங்கள் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம்.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையுடன் மக்களுக்கு நிவாரணம் வழங்கி இருந்தோம்.மக்களுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து நிவாரணங்களையும் வழங்கி இருக்கிறோம். அரச ஊழியர்களுக்கு உணரக்கூடிய வகையில் அடிப்படைச்சம்பளத்தை அதிகரித்திருக்கிறோம். ஜனவரியில் மேலும் அதிகரிக்கப்படும்.
மேலும் நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்துக்கு அமைச்சுக்களுக்கு வாகனங்கள் தேவைப்படுகின்றன. இருக்கும் வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாலே ஒவ்வொரு அமைச்சுக்கும் எத்தனை வாகனம் தேவை என்பதை கணக்கிட்டு, இற்க்குமதி செய்ய நிதி ஒதுக்கி இருக்கிறோம்.
எனவே எமது நாட்டின் பொருளாதாரத்தை உலகில் பலமான பொருளாதாரமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தையே நாங்கள் கொண்டு செல்கிறோம். அதற்கு எதிர்க்கட்சியும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.





