வாழ்க்கைச் செலவு மட்டுமே அரசாங்கத்தின் கீழ் அதிகரித்துள்ளது: எதிர்க்கட்சித் தலைவர்
தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் நிர்க்கதியாக தள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வாழ்க்கைச் செலவு மாத்திரமே அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொரளையில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்கள் மீது அரசியலை வைக்காது என வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? ஒரு கணம் நிறுத்தி, இன்று மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் அதிகரித்துள்ளது வாழ்க்கைச் செலவு மட்டுமே. அரசியல் வெற்றிக்காக ஒன்றன் பின் ஒன்றாக பொய்களைச் சொன்னார்கள். பொதுமக்களை ஏமாற்றிவிட்டனர்,'' என்றார்.
தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் நிர்க்கதியாக தள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
"இந்த அரசாங்கமோ அல்லது முந்தைய அரசாங்கமோ இந்தச் சமூகம் எதிர்கொள்ளும் கஷ்டங்களை உணர்கிறதா அல்லது உணர்கிறீர்களா? புதிய கொழும்பைக் கட்டியெழுப்ப நாம் கருதியுள்ளோம். நாங்கள் எப்போதும் மக்களுடன் நிற்போம். மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியல் செய்கிறோம். உங்கள் தேவைகளுக்குக் கட்சி அரசியலை நாங்கள் ஒருபோதும் வைக்க மாட்டோம். சீரான வேகத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும் இந்த நாட்டை வலுவூட்ட நாங்கள் தயாராக உள்ளோம்" என்று சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.