Breaking News
டவுன்டவுனுக்கு கிழக்கே வீடற்ற முகாமின் ஒரு பகுதியை அகற்ற மொன்றியல் காவல்துறை நடவடிக்கை
ஆரம்பத்தில், அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற நவம்பர் 21 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

மொன்றியல் காவல்துறையினர் நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள நோட்ரே-டாம் தெரு கிழக்கில் வீடற்ற முகாமின் சில பகுதிகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம், கியூபெக்கின் போக்குவரத்து அமைச்சகம் (MTQ) மெர்சியார்-ஹோசேலகா-மைசோநவே (Mercier-Hochelaga-Maisonneuve) பெருநகரில் உள்ள மோர்கன் பூங்காவிற்கு அருகில் கூடாரங்களில் வசித்து வந்த மக்களுக்கு வெளியேற்ற அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த நிலம் கியூபெக் அரசுக்கு சொந்தமானது.
ஆரம்பத்தில், அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற நவம்பர் 21 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
தீ அபாயங்கள் மற்றும் சுகாதாரமற்ற நிலைமைகள் முகாமை அகற்றுவதற்கான காரணங்களாக மாகாணம் மேற்கோள் காட்டியுள்ளது.