பிள்ளயானின் அடிப்படை உரிமை மனு விசாரணை
கடந்த ஏபரல் 8 ஆம் திகதி தனது சேவை பெறுநர் பிள்ளையானை மட்டக்களப்பில் தனது கட்சி அலுவலக்த்தில் வைத்து சி.ஐ.டி. கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

தன்னை கைது செய்து பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எடுத்த நடவடிக்கை ஊடாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்லது. அதன்படி குறித்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு 23-07-2025 அன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க, சோபித்த ராஜகருனா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலிக்கப்ப்ட்டது. இதன்போதே மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.
இதன்போது மனுதாரரான முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா விடயங்களை முன் வைத்தார்.
கடந்த ஏபரல் 8 ஆம் திகதி தனது சேவை பெறுநர் பிள்ளையானை மட்டக்களப்பில் தனது கட்சி அலுவலக்த்தில் வைத்து சி.ஐ.டி. கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதன்பின்னர் பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள தனது சேவை பெறுநருக்கு எதர்காக தடுத்து வைக்கப்ப்ட்டுள்ளார் என்பதற்கான காரணம் கூட குறிப்பிடப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா குறிப்பிட்டார்.