Breaking News
தங்க கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு பிணை வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு
பன்னாட்டு அளவில் தங்க கடத்தல் வலையமைப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமலாக்க இயக்குநரகம் கர்நாடகாவில் சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
துபாயில் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கத்தைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவுக்குப் பிணை வழங்கச் சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. பன்னாட்டு அளவில் தங்க கடத்தல் வலையமைப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமலாக்க இயக்குநரகம் கர்நாடகாவில் சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
கடத்தல் நடவடிக்கையுடன் சாத்தியமான தொடர்புகள் குறித்து ராவின் சமீபத்திய திருமணத்தின் காணொலிப் காட்சிகளை நடுவண் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆராய்ந்து வருகிறது. மேலதிகச் சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள ராவ் நீதிமன்ற காவலில் இருப்பார்.





