மாளிகாவத்தையில் காதல் விவகார மோதலில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு
இதன்போது, குறித்த யுவதிக்காக மோதலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களும் ஒருவரையொருவர் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 காயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 29 ஆம் திகதி இரவு மாளிகாவத்தையில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யுவதியொருவர் மீது காதல் உறவில் இருந்ததாக தெரிவிக்கப்படும் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், அது கத்திக்குத்துத் தாக்குதலாக மாறியுள்ளது. இதன்போது, குறித்த யுவதிக்காக மோதலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களும் ஒருவரையொருவர் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
அத்துடன், இந்த மோதலை விலக்க முற்பட்ட இளைஞர்கள் ஒருசிலரும் இதன்போது கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சம்பவத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மோதலில் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இதன்போது காயமடைந்த 3 இளைஞன் தொடர்ந்தும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





