நீர்ப்பாசன பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை
குறிப்பிட்ட ஒரு பிரிவு ஊழியர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளமை தமது உறுப்பினர்கள் மத்தியில் பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2027 வரவு - செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தி, நேற்றும் (14) இன்றும் (15) வார இறுதி கடமைகளிலிருந்து விலகிக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக இலங்கை நீர்ப்பாசனப் பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், நாளை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அனைத்துப் பொறியியல் உதவியாளர்களும் சுகவீன விடுமுறையை பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் எஸ்.ஏ.ஆர்.கே. சுபசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் விளக்கமளிக்கையில், ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு,செலவுத் திட்ட முன்மொழிவுகளில் தமது கொடுப்பனவுகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட ஒரு பிரிவு ஊழியர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளமை தமது உறுப்பினர்கள் மத்தியில் பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவித்த செயலாளர், உரிய அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் வரை மேலும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.





