பூஜித்தவின் மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு
மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக எதிர்வரும் வாரம் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வோம்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வோம் என அவரது சட்டத்தரணி ரொஹான் தெஹிவல தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிகட சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, சிறையில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை சந்தித்து மரண தண்டனை தீர்ப்பு எதிராக மேன்முறையீடு செய்வது குறித்து கலந்துரையாடினேன்.
மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக எதிர்வரும் வாரம் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வோம்.
தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டு 25 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய வேண்டும்.அதற்கமைய தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் எமது சேவை பெறுநருக்கு திருப்தியில்லை. ஆகவே அந்த தீர்ப்பு எதிராக சட்டத்தின் பிரகாரம் மேன்முறையீடு செய்வோம் என்றார்.





