மல்வத்து மற்றும் அஸ்கிரி அநுநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதிஅநுர
சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்றையதினம் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு அநுநாயக்க தேரர்களைச் சந்தித்து, பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
மல்வத்து மகா விகாரையில், சியாமோபாலி பீட மல்வத்து தரப்பின் திம்புல்கும்புரே விமலதம்ம அநுநாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, சியாமோபாலி மகா பீடத்தின் அஸ்கிரி தரப்பு நாரம்பனாவே ஆனந்த அநுநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற ஜனாதிபதி, அஸ்கிரி கெடிகே ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்து, அஸ்கிரி தரப்பு அநுநாயக்க தேரர் பொலன்னறுவை சொலொஸ் மஸ்தானாதிபதி வெண்டருவே உபாலி அநுநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க, அக்கமஹா பண்டித மகுலேவே விமல நாயக்க தேரரைச் சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அவர் வசிக்கும் மீரிகம, மினியோலுவ, ஸ்ரீ வித்யாவாச பிரிவென மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மகாநாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்தார். இதன்போது மகாநாயக்க தேரர் செத்பிரித் பாராயணம் செய்து, பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக ஜனாதிபதிக்கு தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.





