Breaking News
கபில சந்திரசேனவின் மரணம் குறித்தான நீதிவான் விசாரணை ஒத்திவைப்பு
இந்த விசாரணை கோட்டை நீதிவான் பசான் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்தான நீதிவான் விசாரணையை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த விசாரணை கோட்டை நீதிவான் பசான் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கபில சந்திரசேனவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், அவர் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டப் பிரதிநிதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடமும் நீதிமன்றம் வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்து கொண்டதுடன், மேலதிக சாட்சியங்களை ஆராய்வதை அடுத்த விசாரணைத் தவணை வரை ஒத்திவைத்தது.





