கலபொட ஞானிசார தேரரின் இறுதிச் சடங்குகள் அரச அனுசரணையுடன் நடைபெறும்
கொழும்பு புதிய கோரளையின் பிரதம சங்கத்தினரும், கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய கலபொட ஞானிசார தேரர் வெள்ளியன்று (02) தனது 81 ஆவது வயதில் காலமானார்.
கங்காராமய விகாரையின் காலஞ்சென்ற கலபொட ஞானிசார தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (05) ஆம் திகதி விகாரைக்கு அருகிலுள்ள மைதானத்தில் அரச அனுசரிப்பில் இடம்பெறவுள்ளதாக இறுதிச் சடங்குகள் குழு தெரிவித்துள்ளது.
காலஞ்சென்ற தேரரின் பூதவுடல் சனியன்று (03) காலை 06.00 மணிக்கு கங்காராமய விகாரைக்கு கொண்டு வரப்பட்டு, எதிர்வரும் திங்கட்கிழமை (05) வரை பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்படவுள்ளதாக இறுதிச் சடங்குக் குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு புதிய கோரளையின் பிரதம சங்கத்தினரும், கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய கலபொட ஞானிசார தேரர் வெள்ளியன்று (02) தனது 81 ஆவது வயதில் காலமானார்.
தேரர் உயிரிழக்கும் போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.