கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை
இது குறித்த விரிவான அறிக்கை ஜூன் 2ஆம் திகதி அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டது.
அமெரிக்கா விதித்த 12.5 சதவீத புதிய இறக்குமதி வரி விதிப்பைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி அகழ்ந்தெடுக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இறக்குமதி செய்யப்படவுள்ள பொருட்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ nhதாழிலாளர்களின் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை அல்லது அகழ்ந்தெடுக்கப்பட்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்காக, இறக்குமதியாளர்கள் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து சான்றளிக்கும் ஆவணங்களைப் பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் கட்டாய உழைப்பைக் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதித் தடையை அமல்படுத்த தவறியதன் காரணமாக, அமெரிக்காவினால் புதிய இறக்குமதி வரி விதிக்கப்பட்ட 60 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்த விரிவான அறிக்கை ஜூன் 2ஆம் திகதி அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டது.
குறித்த அறிக்கையில், தொழிலாளர்களின் கட்டாய உழைப்பு இறக்குமதித் தடையை இலங்கை அமல்படுத்த தவறியது நியாயமற்றது என்றும், அதே நேரத்தில் இது அமெரிக்க வர்த்தகத்திற்கு சுமையாகவும் அல்லது தடையாகவும் அமைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா முடிவுற்ற பருத்தி மற்றும் பருத்தி கலந்த ஆடைகளை நுகரும் நாடாகும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள குறித்த அறிக்கை, இலங்கை உட்பட பத்து நாடுகள் சீனாவுடன் தொடர்புடைய இடைநிலை உற்பத்தியாளர்கள் குறித்த விரிவான ஆய்வையும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





