விசாரணை அறிக்கைகளை விரைவில் பகிரங்கப்படுத்துவோம்;நீதி அமைச்சர்
68பேர் பொதுமன்னிப்பளிக்கப்படாது நேரடியாக விடுத்தலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்ட நிலையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விரைவில் விசாரணை அறிக்கைகளை வெளிப்படுத்தவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பளிக்கப்பட்ட 338பேருக்கு அப்பால் மூவர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு நத்தார் உள்ளிட்ட கடந்தகாலப் பண்டிகையின்போது 68பேர் பொதுமன்னிப்பளிக்கப்படாது நேரடியாக விடுத்தலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்ட நிலையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதிக்கு உரித்தான பொதுமன்னிப்பளிக்கும் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சு மட்டத்தில் உள்ள விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சி.ஐ.டியின் 28இற்கும் அதிகமாக குழுக்கள் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. தற்போதைய சூழலில் விசாரணகள் முன்னெடுக்கப்படடுவதால் அதுபற்றிக் கூற முடியாது. எனினும் வெகு விரையில் உள்ள விசாரணை அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதற்கே எதிர்பார்த்துள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்பபட்டு வருகின்றன என்றார்.





