Breaking News
நெல் கொள்வனவு இம்மாதம் ஆரம்பம்
பி.எம்.பி.யிடம் போதுமான நிதி இருப்பதாகவும், தேவையான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஜனவரி மூன்றாவது வாரத்தில் இருந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையில் சுமார் 300,000 மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னாலந்த தெரிவித்தார்.
இதற்காக பி.எம்.பி.யிடம் போதுமான நிதி இருப்பதாகவும், தேவையான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இவ்வாறு பெறப்படும் நெல் அரசாங்கத்தின் கையிருப்பின் ஒரு பகுதியாக களஞ்சியப்படுத்தப்படும் என்றும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் நெல் கொள்வனவு சபையின் தலைவர் விளக்கினார்.