Breaking News
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பிணை
காங்கிரஸ் மூத்த தலைவர் மோகன் ஜோஷி நீதிமன்றத்தில் பிணையாளராக நின்றார்.

இந்துத்துவா சித்தாந்தவாதி விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நின்ற பின்னர்நீதிமன்றம் ரூ .25,000 பிணை பத்திரத்தில் பிணை வழங்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மோகன் ஜோஷி நீதிமன்றத்தில் பிணையாளராக நின்றார்.
ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிலிந்த் பவார், காங்கிரஸ் தலைவர் முன்னிலையாவதில் இருந்து நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது என்று கூறியதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.