சிறிலங்காவின் கழிவு முகாமைத்துவ திறனை மேம்படுத்த ஜப்பான் 565 மில்லியன் ரூபாவை வழங்குகிறது
நன்கொடை வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

'தூய சிறிலங்கா’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கழிவு முகாமைத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் சிறிலங்காவுக்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ரூபா 565 மில்லியன்) நன்கொடையை வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
ஜப்பானின் பாராளுமன்ற வெளிவிவகார துணை அமைச்சர் திருமதி சயாமா (இக்குய்னா) அகிகோ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
28 குப்பை கொம்பாக்டர்களை கொள்வனவு செய்வதற்கு நிதியளிப்பதன் மூலம் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்றங்களின் கழிவு முகாமைத்துவ திறனை மேம்படுத்துவதற்கு இந்த மானியம் பயன்படுத்தப்படும்.
மேல் மாகாணத்தில் 14 பாரவூர்திகளும், கிழக்கு மாகாணத்தில் 8 பாரவூர்திகளும், வட மாகாணத்தில் 6 பாரவூர்திகளும் ஒதுக்கீடு செய்யப்படும்.