ஹரிணி அமரசூரியவுடன் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் சந்திப்பு
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய பிரதமர் அமரசூரிய திறமையான தொழிலாளர் படையை வளர்ப்பதற்கு பொருளாதார தேவைகளுடன் கல்வி முறையை சிறிலங்காவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, சிறிலங்காப் பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், சிறிலங்காவின் பொருளாதார சவால்களை எதிர்கொள்வது மற்றும் கல்வி மற்றும் நிர்வாக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை கண்டறிவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய பிரதமர் அமரசூரிய திறமையான தொழிலாளர் படையை வளர்ப்பதற்கு பொருளாதார தேவைகளுடன் கல்வி முறையை சிறிலங்காவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
சிறிலங்காவின் பன்னாட்டு நாணய நிதியத்தின் திட்டம் மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் பன்னாட்டுக் கூட்டாண்மைகளின் பங்கு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.