Breaking News
இஸ்ரேலில் வாகனம் மோதி 10 பேர் காயம்
நெடுஞ்சாலை 65 இல் உள்ள பர்தேஸ் ஹன்னா-கர்கூர் சந்திப்புக்கு அருகில் உள்ளூர் நேரப்படி மாலை 4.18 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இஸ்ரேலில் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு வாகனம் பாதசாரிகள் மீது மோதியதாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என இஸ்ரேல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேலின் தேசிய அவசர மருத்துவ சேவையான மேகன் டேவிட் ஆடம் வெளியிட்ட அறிக்கையின்படி, நெடுஞ்சாலை 65 இல் உள்ள பர்தேஸ் ஹன்னா-கர்கூர் சந்திப்புக்கு அருகில் உள்ளூர் நேரப்படி மாலை 4.18 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதில் பத்து பேர் காயமடைந்தனர். இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காயமடைந்தவர்களில் 20 முதல் 70 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் இருந்தனர் என்று மேகன் டேவிட் அடோம் செய்தித் தொடர்பாளர் ஜாக்கி ஹெல்லர் உள்ளூர் ஊடகங்களை மேற்கோளிட்டுள்ளார்.