விபத்தில் சிக்கிய சோனு சூட் மனைவிக்கு தீவிர சிகிச்சை
சோனாலிக்கு அதிக அளவில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரின் சகோதரி மற்றும் மகன் இருவரும் ஐசியூவில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி, நேற்று தன்னுடைய சகோதரி மற்றும் மகனுடன் மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது, விபத்தில் சிக்கினார். சோனாலிக்கு அதிக அளவில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரின் சகோதரி மற்றும் மகன் இருவரும் ஐசியூவில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இவர்கள் பயணித்த கார் அப்பளம் போல நொறுங்கியது. இதுதொடர்பான சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியாகி வைரல் ஆனது.
இந்த விபத்து குறித்து அறிந்த சோனு சூட், இரவோடு இரவாக நாக்போர் விரைந்தார். மேலும் இந்த விபத்து இவர்கள் பயணித்த கார் ட்ரக் மீது மோதியதால் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. விபத்தில் காரின் நிலையைப் பார்த்தால் அதிவேகத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது தெரிகிறது. இதுகுறித்து பேசிய நடிகர், மனைவி தேறி வருகிறார். ஆனால், அவருக்கு காயங்கள் அதிகமாக உள்ளது. விபத்தைப் பார்த்தால், அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது
சோனாலி சூட் , சகோதரி - மகன் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் 2 மூன்று நாட்கள் அவர்களுக்கு தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.